Tips 1 - சமையலறை
நம் வீட்டு சமையலறையில் பீங்கான் சாடி அல்லது கண்ணாடி பாத்திரம் அல்லது மண் பாத்திரத்தில் உப்பு கொட்டி வைப்பது மிகவும் நல்லது.உப்பு என்று சொன்னாலே மகாலட்சுமி தாயின் அம்சம் என்று ஆகும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கல் உப்பு, கல் உப்பு நம் வீட்டில் கொட்டி வைக்கும் பாத்திரத்தில் அப்படியே கல் உப்பை கொட்டி வைக்க கூடாது.
✔️முதலில் கைப்பிடி அளவுக்கு பச்சரிசியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
✔️அவ்வாறு கையில் எடுத்துக்கொண்ட பச்சரிசியை நீங்கள் எந்த பாத்திரத்தில் உப்பு கொட்டுவீர்களோ அந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டிக் கொள்ள வேண்டும்.
✔️பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாணயத்தை நீங்கள் கொட்டிய பச்சரிசிக்கு மேலே பாத்திரத்தின் நடுவில் வைத்துக் கொள்ளுங்கள்.
✔️பிறகு இறுதியாக கல் உப்பை, கல் உப்பு பாத்திரம் நிறையும் வரை கட்டிக் கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் உப்பு குறைய குறைய மறக்காம உப்பை கொட்டி கொள்ளுங்கள்.
முக்கியமாக வெள்ளிக்கிழமை அன்று உப்பை பாத்திரத்தில் கொட்டி வைத்தால் மிகவும் நல்லது. இந்த மாதிரி செய்யும் பொழுது வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
![]() |
| தெய்வீக பலன் பெற கல் உப்பு |
Tips 2 - கண்திருஷ்டி பரிகாரம்
உங்கள் வாழ்வில் நீங்கள் கடுமையாக முயற்சி செய்தும் எந்த ஒரு நல்ல விஷயமும் உங்களுக்கு நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்தால் குறிப்பிட்டு கீழே சொல்லி உள்ள கல் உப்பு பரிகாரத்தை செய்து பாருங்கள்.
நீங்கள் நல்வழியில் செய்யவிருக்கும் எந்த ஒரு காரியமாக இருப்பினும் ,பத்து நாட்களில் இந்த பரிகார மூலம் கண்டிப்பாக உங்களுக்கு நிறைவேறும்.நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் இந்த உப்புக்கு பல மகத்துவம் இருக்கிறது.
பொதுவாக நீங்க எந்த வீட்டிற்கு விருந்திற்கு சென்றாலும் அங்கு சாப்பாட்டு இலையில் உப்பு வைப்பது ,ஒரு முறையாக நம் முன்னோர்களிடம் இருந்து நாம் பின்பற்றி வருவதே.
அவ்வாறு உப்பு வைப்பது வெறுமனவே சாப்பாட்டின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல,நம் வீட்டிற்கு வருபவர்கள் வேப்பில் நம்மை பார்த்து ஆச்சரியப்படும் போது வீட்டில் வந்திருக்கும் விருந்தினருக்கு இலையில் உப்பு வைப்பது மூலமாக கண் திருஷ்டி நீங்கும் என்ன சாஸ்திரம் சொல்கிறது.
![]() |
| நினைப்பது நிறைவேறும் பரிகார முறை |
இந்த பரிகாரம் செய்வதற்கு காலை அதாவது நாலு டு எட்டு மணிக்குள் செய்வதே உகந்த நேரம் ஆகும்.பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு பல் துளைக்கி, குளித்துக் கொள்ள வேண்டும்.
வீட்டின் கிழக்கு பக்கம் பார்த்து சம்மணங்கால் போட்டு அமர வேண்டும். அவ்வாறு அமரும் பொழுது முதுகுத்தண்டு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும்.
பிறகு வலது கைகளால் ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு எடுத்துக் கொண்டு கல்லுப்பை கையில் வைத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நடக்க வேண்டும் என்று விருப்பப்படும் காரியங்களை உங்கள் மனதிற்குள் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு தங்கள் கைகள் உள்ள கல் உப்பை ஆற்றிலேயோ அல்லது வீட்டில் உள்ள குழாய் பைபிளியோ நன்றாக கரைத்து விடவும். இவ்வாறு நீங்கள் செய்து வருவது மூலமாக விரைவில் உங்கள் பிரச்சனைகள் நீங்கி நீங்கள் நடக்கும் காரியங்கள் நடக்கும்.

